வளர்பிறை சதுர்த்தி திதியையே விநாயகர் சதுர்த்தி என்கிறோம். வியாசர் எழுதிய, 18 புராணங்களில் ஒன்று, பிரமாண்ட புராணம். இதில், லலிதோபாக்யானம் என்ற பகுதி இருக்கிறது. அதில், விநாயகரின் பிறப்பு பற்றி வித்தியாசமாகக் கூறப்பட்டுள்ளது. அன்னை பராசக்தி, லலிதாம்பிகை என்ற பெயரில், தேவர்களுக்கு உதவி செய்ய வந்தாள். பண்டாசுரன் என்பவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டு மென, தேவர்கள் அம்பாளிடம் முறையிட்டனர்.
அம்பாளும், அவர்கள் மீது கருணை கூர்ந்து, பண்டாசுரனு டன் போர் தொடுக்க கிளம்பினாள். அவளுடன் தேவப்பெண்கள் மட்டுமே அடங்கிய படை ஒன்றும் கிளம்பியது. அவர்கள் அக்னி கோட்டை அமைத்து பாதுகாப் பாக தங்கியிருந்தனர். பண்டா சுரனுக்கு, விசுக்ரன் என்ற படைத்தளபதி இருந்தான். அவன் மந்திர தந்திரம் அறிந்தவன். அம்பாளின் படையை அடக்குவது எப்படி என்று யோசித்தான். பலத்தால், அவர்களை அடக்க முடியா தென்பதை அவன் அறிவான். எனவே, மந்திரத்தை பயன் படுத்தி, ஒரு யந்திரம் செய்தான். அதற்கு, "விக்ன யந்திரம்’ என்று பெயர். விக்னம் என்றால் தடை.
அந்த யந்திரத்தின் தன்மை என்ன தெரியுமா?
யாருக்கு சாதகமாகப் போரிடு கிறார்களோ, அவர்களுக்கு எதி ராகவே மனநிலையை திருப்பி விட்டு விடும். அந்த யந்திரத்தை, அவன் அக்னி கோட்டைக்குள் வீசி விட்டான். அது உள்ளே வந்து விழுந்ததோ இல்லையோ, சக்தியின் படைகளின் மனமும் மாறிவிட்டது.
"இந்த அம்பாள் என்ன பெரிய ஆளா! இவள் சக்தி வாய்ந்தவளாக இருந்தால், சிவனுடைய மனைவி என்ற அந்தஸ்து பெற்றவளாக இருந்தால், தனியாக நின்றே பண்டாசுரனை ஜெயித்திருக்கலாமே! நம்மை இவள் அழைத்து வந்திருக்கிறாள் என்றால், அவளை விட, நம் வீரத்தை அதிகம் நம்புகிறாள் என்று தானே பொருள்! இப்படிப்பட்டவளுக்காக, நாம் ஏன் வீணாக அசுரர்களைப் பகைத்து உயிரிழக்க வேண்டும்! இந்தப் போரில் நாம் பங்கேற்கக்கூடாது…’ என்று முடிவெடுத்தனர்.
ஆனால், இந்த லீலைகள் எல்லாவற்றையுமே அம்பாளே செய்கிறாள் என்பது படைகளுக்கு தெரியாது. இந்த விக்னத்தைக் களைய, சிவசக்தி அம்சத்துடன் ஒருவன் வந்தாக வேண்டும்! அவனை உலகமே முழுமுதற்கடவுளாக வணங்க வேண்டும் என்பதல்லவா அவளது நோக்கம்.
எனவே, அவள் அக்னி கோட்டைக்கு சிவனை வரவழைத் தாள். அவரை நோக்கி சிரித்தாள். அந்த சிரிப்பின் அழகில் சொக்கிப்போன சிவனும் சிரித்தார். அவர்களது சிரிப்பிலேயே அவதரித்தார் வெள்ளைக் கொம்பனான விநாயகப் பெருமான்.
தங்கள் அன்பு மகனை உச்சிமோந்த பெற்றோர், "விநாயகா… நீ அக்கினி கோட்டைக்குள் கிடக்கும் யந்திரத்தை கண்டுபிடித்து, அதை அழித்து விடு’ என்றனர்.
விநாயகரும் அந்த யந்திரத்தை தன் தந்தத்தால் குத்தி சின்னா பின்னமாக்கினார். யந்திரம் அழிந்ததுமே, அம்பாளுடன் சென்றிருந்த படைகளின் மனம் மாறியது. "ஆகா… நமக்குள் ஏ@தா மாற்றம் ஏற்பட்டதே! அது எப்படி? அம்பாளுக்கு எதிராக நடந்து விட்டோமே…’ என வருந்தினர். அம்பாளின் திருப் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
அம்பாள் அவர்களைத் தேற்றி, "இது எல்லாமே என்னால் நடந்தது. நாம் செய்யப் போகும் இந்த தர்மயுத்தம் மட்டுமல்ல, இவ்வுலகில் எந்தச் செயலைத் துவங்கினாலும் அது தடையின்றி வெற்றிகரமாக முடிய, என் மகன் விக்னேஸ் வரனை வணங்கிய பிறகே துவங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நாடகத்தை நிகழ்த்தினேன்…’ என்றாள். பின், படையினர் தீரமாகப் போரிட்டு, பண்டாசுரனை அழித்தனர்.
அம்மாவின் கட்டளையை நிறைவேற்ற பிறந்த பிள்ளை விக்னேஸ்வரர். விக்னம் என்றால் தடை. ஈஸ்வரர் என்றால் கடவுள். தடைகளை நீக்குபவர் என்பதால் விநாயகருக்கு, "விக்னேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. இளைஞர்களே… உங்கள் அன்னையை தெய்வமாக மதித்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றுங்கள். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உறுதி எடுப்பீர்களா!
Senthilvayal.