பெங்களூர்: நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை பந்து வீசியுள்ள இந்திய வீரர்களில் குறைந்த ரன்களை கொடுத்து, அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்று புதிய சாதனையை படைத்துள்ளார் தமிழக சுழல்பந்துவீச்சாளரான அஸ்வின்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழல்பந்துவீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வின், தமிழகத்தை சேர்ந்தவர். இந்திய அனுபவ சுழல்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங்கின் மோசமான பார்ம் காரணமாக
அவருக்கு பதிலாக அணியில் வாய்ப்பு கிடைத்த அஸ்வின், தனது இடத்தை தற்போது
நிரந்தரமாக்கி வருகிறார்.
இந்திய அணிக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின், 4 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை எடுத்துள்ளார். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களை
வீழ்த்தியுள்ளார்.
ஹைதராபாத்தில் நேற்று முடிவடைந்த நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய அஸ்வின், முதல் இன்னிங்ஸில் 31 ரன்களை கொடுத்து 6 விக்கெட்களையும், 2வது இன்னிங்ஸில் 54 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்திற்கு எதிரான முதல்
டெஸ்ட் போட்டியில் 85 ரன்களை கொடுத்து 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.
அஸ்வினின் சிறந்த பந்துவீச்சின் மூலம் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 115 ரன்களுடன் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.
அஸ்வின் இதுவரை ஆடியுள்ள 7 டெஸ்ட் போட்டிகளில் 26.83 சராசரியுடன் 43 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் அதிக டெஸ்ட் விக்கெட்களை குறைந்த போட்டிகளில் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
முன்னதாக முன்னாள் இந்திய வீரர் நரேந்திர ஹிர்வானி 7 டெஸ்ட் போட்டிகளில் 20.71 சராசரியுடன் 42
விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. மேலும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், ஒரே போட்டியின் 2 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் அஸ்வின் தான்.
கடந்த 1964ம் ஆண்டு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முன்னாள் இந்திய வீரர் வெங்கட்ராகவன் ஒரே டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்கள் வீழ்த்திய சாதனையையும் அஸ்வின் சமன் செய்துள்ளார்.
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், ஒரு போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய
வீரர்களில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கார்னி வால்ஷ் மட்டுமே அஸ்வினை விட சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் கடந்த 1994ம் ஆண்டு வில்லிங்டன் டெஸ்ட் போட்டியில் 55 ரன்களை கொடுத்து 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் கூட்டணி சுழல்பந்துவீச்சு மூலம் பல
வெற்றிகளை பெற்று தந்தது. அதேபோல இளம் சுழல்பந்துவீச்சாளர்களாக வலம் வரும் அஸ்வினும், ஓஜாவும் வருங்காலத்தில் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தருவார்களா?