மஞ்சப்பை.. பெயரைக் கேட்டதுமே கிராமம் கண்முன் நினைவுக்கு வரலாம். அந்த கிராமத்தில் வாழும் ஒரு தாத்தாவுக்கும் நகரத்துப் பேரனுக்குமான அழகிய உறவைச் சொல்லும் படம் இந்த மஞ்சப்பை.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்றாக வரும் என படம் பார்த்தவர்கள் சிலாகித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஜீவன் என்றால் தாத்தாவாக நடித்திருக்கும் ராஜ்கிரண்தானாம்.
ராஜ்கிரணும்டன் விமல், லட்சுமி மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான லிங்குசாமி படம் குறித்துக் கூறுகையில், "இந்த படத்தை முடித்துவிட்டு, என்னிடம் முதல் பிரதியை பார்க்கச் சொன்னார் இயக்குநர் ராகவன். சரியான நேரம் கிடைக்காத சூழ்நிலையில் இப்படத்தை பார்க்க முடியவில்லை.
இருந்தும், ஒருநாள் எனது வீட்டிலேயே இந்த படத்தை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்தேன். திரையரங்குக்கு சென்று தனியாக அமர்ந்து பார்ப்பதேவிட வீட்டில் குடும்பத்தோடு பார்ப்பது அந்த படத்தை பற்றி முழுமையாக உணர முடியும் என்பதால் வீட்டிலேயே இந்த படத்தை பார்த்தேன். இந்த படத்தை பார்த்து இறுதிக் காட்சியில் கண்கலங்கி நின்றேன். என்னைப்போலவே எனது குழந்தைகளும் கண்கலங்கினர்.
படம் பார்த்த பிறகு இதேபோல் உங்களுக்கும் அந்த பாதிப்பும் ஏற்படும். ராஜ்கிரண் அவர்களுக்கு ‘சண்டக்கோழி'யைப் போன்று முக்கியமான படமாக இருக்கும். விமல்-லட்சுமிமேனனுக்கும் இந்த படம் அவர்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக இருக்கும்," என்றார்.
ராஜ்கிரண் பேசுகையில், "இந்தப் படத்தில் நானும் விமலும் தாத்தா பேரனாக நடித்திருக்கிறோம். படத்தில் நடித்து முடித்த பிறகு கிட்டத்தட்ட நாங்கள் அதே போல மாறிவிட்டோம். இப்போது எங்கே பார்த்தாலும் என்னை தொப்பைத் தாத்தா என்றுதான் அழைக்கிறார் விமல், என்றார். இந்தப் படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். மாசாணி ஒளிப்பதிவு செய்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் லிங்குசாமி இப்படத்தை வெளியிடுகிறார். இயக்குநர் சற்குணம் தயாரித்துள்ள படம் இது.