ஆத்தூர்: ஆத்தூர் அருகே சொத்து பிரச்னை காரணமாக மகள்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால், இறந்த தந்தையின் உடலை, நான்கு நாட்களுக்கு பின் அடக்கம் செய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பஞ்சாயத்து, வடசென்னிமலை ரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு (எ) ராமசாமி, 76. அவருக்கு, மனைவி பெரியம்மாள், மகள்கள் ராஜம்மாள், 47, சாந்தி, 45, மகன் சண்முகம் ஆகியோர் உள்ளனர்.இதில், சண்முகம், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில், மகள் ராஜம்மாள், சண்முகம் என்பவரை திருமணம் செய்து கொண்டு, தந்தை அய்யாவு வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இரண்டாவது மகள் சாந்தி, கணவர் அத்தியப்பன் என்பவருடன் உள்ளார்.சில மாதங்களுக்கு முன், அய்யாவு, 3.40 ஏக்கர் நிலத்தை, மகள் ராஜம்மாளின் கணவர் சண்முகத்துக்கு, "கிரயம்' செய்து கொடுத்துள்ளார். பின், வீடு மற்றும் கிணற்றினை, ராஜம்மாளுக்கு, எழுதிக் கொடுத்ததாகவும் தெரிகிறது. மற்றொரு மகள் சாந்திக்கு, சொத்து எழுதிக் கொடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக, அய்யாவு உயிரிழந்தார். தகவலறிந்த இரண்டாவது மகள் சாந்தி, "தனக்கு சொத்தில் பங்கு தரவேண்டும்' எனக்கூறி, உடல் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்து வந்தார்.அதனால், நேற்று முன்தினம், ராஜம்மாள் உள்ளிட்டோர், "இறந்து மூன்று நாட்களான தந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கு, பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,யிடம், புகார் செய்தனர். அதையடுத்து, ஆத்தூர் டி.எஸ்.பி., மாணிக்கம் தலைமையிலான இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீஸார், ஊர் முக்கியஸ்தர்கள், இரண்டு மகள்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், முதல் மகள் ராஜம்மாளுக்கு இரண்டு பங்கு சொத்தும், இரண்டாவது மகளுக்கு ஒரு பங்கு சொத்து வழங்குவதற்கு, ஒப்புக் கொண்டனர். அதன் பின்னர், நான்கு நாட்களாக வைக்கப்பட்டிருந்த உடலை, நேற்று காலை, 11 மணியளவில், சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தீ வைத்தனர்.இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.